புது யுகமும் புதுமைப் பெண்களும்...

international women's day Marvel Lady Products Marvel Marketing (Pvt)Ltd

உடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவளாக திகழ்கின்றாள்.  தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருக்கும் பெண்கள், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் இருப்பாள் என்று கூறப்படுவது இத-னால் தான். அவ்வாறு தோல்விகளை கண்டு துவண்டுவிடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்களும் நம் மத்தியில் உள்ளனர். இவ்வாறான பெண்கள் மற்றும் அனைத்துலக பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மனித உடம்பில் கண்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சமூகத்தில் பெண்களும் முக்கியமானவர்களேயாவர். கடந்த காலங்களில் ஆண் ஆதிக்கத்தின் கீழாக அடிமைப்பட்ட பெண்ணியம், பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, சுயவிருப்பிலான விவாக உரிமை, வழிபாட்டுரிமை என்பன அற்றவர்களாகவே இருந்தனர். பின்னர் சுதந்திர தேசத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் தமக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு ‘நாங்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல’ என்பதனை நிரூபிக்கும் வகையில் மண் முதல் விண் வரை சமூகத்தின் எத்துறையை எடுத்துக்கொண்டாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளமையை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இல்லத்தலைவியாக மட்டுமே இருந்த அன்றையப் பெண்கள் இன்று நாட்டின் தலைவியாகவும், உலகத்தின் முதல்வியாகவும், ஆண்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு முன்னிலையை அடைய தங்கள் ஆளுமைகளை விருத்தி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவ்வாறு உளவியல் ரீதியில் சாதனைகளைப் படைத்துள்ள பெண்கள் உடலியல் ரீதியிலும் ஆரோக்கியமானவர்களாக விளங்க வேண்டும்.

குறிப்பாக பெண்களது மாதாந்திர அசௌகரியமான தருணங்களின் போது பயன்படுத்தக்கூடிய உற்பத்திகளை சுகாதாரமான முறையிலும், தரமான முறையிலும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக MARVEL MARKETING (PVT) LTD காணப்படுகின்றது. அத்துடன் பெண்களின் சுகாதாரத்தை கருத்திற் கொண்டு MARVEL தனது உற்பத்தி பொருட்களின் தரத்தை மென்மேலும் வலுப்படுத்தி வருகின்றது.

இலங்கைத் தலைநகரில் பிரபல மொத்த சில்லறை விற்பனைத்துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் MARVEL MARKETING (PVT) LTD ஆனது தனது வாடிக்கையாளர்களை மேலும் கவரக்கூடிய அழகிய வண்ணமயமான உறைகளில் பாதுகாப்பானதும் சுகாதார ரீதியிலுமான Baby Diapers, Baby Wet Wipes,  Diaper Pant, Baby Blanket, Cot Sheet, Nappies, Lady Wet Tissues, Panty Liners, Tampons, Sanitary Pads, Marvel Guard Adult Diapers, Under Pads, Disinfeting Wet Wipes, Underarm Sweat Pads உற்பத்திகளை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. மேலும் பெண்களின் அசௌகரிய நாட்களுக்கான தீர்வுகளாய் அமையக்கூடிய Panty Liners, Tampons, Sanitary Pads போன்ற சுகாதாரத் தெரிவுகளையும், அதிக வியர்வையை உறிஞ்சக்கூடியதும், துர்நாற்றம் ஏற்படுவதை கட்டுப்படுத்தக்கூடியமான Underarm Sweat Pads உற்பத்திகளையும் MARVEL MARKETING (PVT) LTD  ஆனது நாடு பூராகவும் உள்ள கார்கீல்ஸ் (Cargills), ஆர்ப்பிக்கோ (Arpico), கீல்ஸ் சுப்பர் (Keels Super), ஹெல்த் கார்ட் (Health Guard), Smart Pick, SPAR ஆகிய இடங்களில் பெண்கள் தங்களின் பாவனைக்கு இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் நாடு முழுவதிலும் தன்னை விஸ்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் MARVEL MARKETING (PVT) LTD நிறுவனத்தின் உற்பத்திகள் அனைத்துமே சுகாதார நிறுவனத்தினால் 100% உத்தரவாதம் வழங்கப்பட்ட சுகாதாரமான சரும தொற்றுகள் ஏற்படாத தரமான உற்பத்திகளாகும். எனவே இன்றைய சாதனை நன்னாளில் பெண்களின் நலனுக்கு சிறந்த தரமான உற்பத்திகளை தயாரிக்கும் MARVEL MARKETING (PVT) LTD நிறுவனம் சாதனை பெண்கள் எல்லோருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதமடைகின்றது.


Older Post Newer Post


Leave a comment

Please note, comments must be approved before they are published